IPL 2021: பிளே ஆப் செல்லுமா மும்பை இந்தியன்ஸ் ? கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதல்!

0
IPL 2021 பிளே ஆப் செல்லுமா மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதல்!
IPL 2021 பிளே ஆப் செல்லுமா மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதல்!

IPL 2021: பிளே ஆப் செல்லுமா மும்பை இந்தியன்ஸ் ? கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதல்!

ஐபிஎல் போட்டியில் இன்று நடக்க இருக்கும் ஆட்டத்தில் தனது கடைசி லீக்கில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகள் குறித்த முழு அலசலை இங்கே அறியலாம்.

பிளே ஆப் செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் போட்டியில் இன்றோடு லீக் ஆட்டங்கள் முடிவடைய உள்ளன. தொடரின் 55வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் களம் காண உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 6 வெற்றியுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இன்று நாடகம் கடைசி போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது பெரிய ஸ்கோர் ஆக இருந்தாலும் குறைந்த ஓவர்களில் எட்டி பிடிக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் நடந்தால் மட்டுமே பிளே ஆப் கனவு பலிக்கும். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் ஒரு சேர தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற்ற முடியும்.

IPL 2021: CSK vs PBKS – பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

மற்றொரு ஐதராபாத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தான் இந்த தொடரை முடிவு செய்யும். ஐதராபாத் தொடக்கம் முதல் தற்போது வரை தடுமாறிக் கொண்டு தான் உள்ளது. கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இன்றைய வெற்றி எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனினும், தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய ஐதராபாத் எல்லா வகையிலும் முயற்சிக்கும். வாழ்வா-சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்று மும்பை பிளே ஆப்பிற்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 9 முறையும், ஐதராபாத் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு ஐதராபாத் இனி இன்று பழி தீர்த்துக் கொள்ள போராடும்.

IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

உத்தேச 11 வீரர்கள்:
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (WK), கேன் வில்லியம்சன் (C), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்
  • மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் சர்மா (இ), இஷான் கிஷன் (டபிள்யூ), சூர்யகுமார் யாதவ், சauரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!