IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்! இன்று பெங்களூரு உடன் பலப்பரீட்சை!

0
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்! இன்று பெங்களூரு உடன் பலப்பரீட்சை!
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்! இன்று பெங்களூரு உடன் பலப்பரீட்சை!

IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்! இன்று பெங்களூரு உடன் பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. அதற்கான பிட்ச் ரிப்போர்ட், வெற்றி வாய்ப்பு மற்றும் உத்தேச அணி விவரம் குறித்த தகவல்களை இங்கே அறியலாம்.

RR vs RCB இன்று மோதல்:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 43வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாம் கட்டம் தொடங்கியதில் இருந்து தடுமாறி வந்தாலும், மும்பைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று பழைய பார்மிற்கு திரும்பியுள்ளனர். பேட்டிங்கில் எப்போதும் போல் கேப்டன் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல் போன்றோர் அதிரடி காட்டுகின்றனர். டிவில்லியர்ஸ் பழைய பார்மிற்கு திரும்பினால் மேலும் வான வேடிக்கைகளை காணலாம். கடந்த போட்டியில் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பில் கேப் வைத்துள்ள ஹர்ஷல் படேல் மிரட்டுகிறார். சூழலில் சஹால் மாயாஜாலம் காட்டுகிறார். இவர்களோடு சிராஜ், ஹஸரங்கா, கைல் ஜேமிசன் போன்றோர் ஒத்துழைப்பு தந்தால் நல்லது.

IPL 2021: MI vs PBKS: மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ராஜஸ்தான் அணி எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் இனி வரும் ஆட்டங்கள் யாவும் வாழ்வா-சாவா ஆட்டமாகவே அமையும். பேட்டிங்கில் ஓரளவிற்கு பார்மில் இருந்தாலும் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. பெரிய ஸ்கோர் குவித்தாலும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சன் தவிர யாரும் ஜொலிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க இயலும்.

இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களில் (181 ரன்கள்) விக்கெட் இழப்பின்றி எட்டி பிடித்து சாதித்தது. அந்த ஆட்டம் போல் இன்றும் அனல் பறக்குமா அல்லது ராஜஸ்தான் பழி தீர்த்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

IPL 2021: KKR vs DC – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சற்று உதவி புரிவது போல தோற்றமளிக்கும். இன்றைய போட்டியில் சேசிங் செய்யும் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்விரு அணிகள் இதுவரை 14 முறை மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

உத்தேச 11 அணி விவரம்:
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), லியாம் லிவிங்ஸ்டன்/டேவிட் மில்லர், மஹிபால் லோமோர், ரியான் பராக்/சிவம் துபே, ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி/ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஜூர் ரஹ்மான்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – விராட் கோலி (c), தேவதத் படிக்கல், KS பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், AB டிவில்லியர்ஸ், டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!