IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

0
IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

பிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

அபார வெற்றி:

ஐபிஎல் தொடரின் 54 வது போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் களத்தில் தள்ளியது.

தமிழகத்தில் 1,400 க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,390 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

கொல்கத்தா அணியில் முதலில் கில் 56 ரன்கள், வெங்கடேஷ் 38 ரன்களை எடுத்தனர். நிதிஷ் ராணா 12 மற்றும், திரிபாதி 21 ரன்களையும் எடுத்தனர். கார்த்தி 14 ரன்கள் மற்றும் மோர்கன் 13 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.0 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 171 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்தனர். இதனால் அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் முதலில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்ததாக லிவிங்ஸ்டன் 6 ரன்கள், சஞ்சு சாம்சன் 1 ரன், சிவம் துபே 18 ரன்கள், அனுஜ் டக் அவுட் ஆகி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ் 8 ரன்கள், ராகுல் மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார். மோரிஸ் டக் அவுட், ஜெய்தேவ் 6 ரன்கள், சகாரியா 1 ரன் மற்றும் முஸ்தபிஸுர் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், மொத்த ஆட்டமும் 16.1 ஓவரில் முடிந்து விட்டது. இறுதியாக 10 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியினர் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!