IPL 2021: RCB vs MI – மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு!!

0
IPL 2021 RCB vs MI - மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு!!
IPL 2021 RCB vs MI - மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு!!

IPL 2021: RCB vs MI – மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு!!

ஐபிஎல்லில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது.

மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு:

பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. மும்பை கேப்டன் ரோஹித் முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி, பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கல் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

IPL 2021: CSK vs KKR – 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!

ஆனால் கேப்டன் கோஹ்லி மும்பை பவுலர்களை சிதறடித்தார். அவருக்கு பாரத் நல்ல ஒத்துழைப்பு தந்தார். அணியின் ஸ்கோரினை சீரான வேகத்தில் கொண்டு சென்றது இந்த ஜோடி. கோஹ்லி 51 ரன்கள் (42 பந்துகள், 3 பவுண்டரி, 3 சிக்ஸர்) மற்றும் பாரத் 32 ரன்கள் (24 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (11), ஷாபாஸ் அகமது (1) என அடுத்தடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 56 ரன்கள் (37 பந்துகள், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஒவர்களின் முடிவில் 165 ரன்கள் குவித்து உள்ளது. மும்பை தரப்பில் பும்ராஹ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!