IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!

0
IPL 2021 - RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
IPL 2021 - RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றது. இதில், பெங்களூர் அணி கொல்கத்தா அணிக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IPL 2021:

ஐபிஎல் தொடரில் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மதிப்பெண் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியிடுகின்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

இதனால் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஜோடி களமிறங்கினர். இவர்கள் முறையே 21 மற்றும் 39 ரன்களை எஎடுத்தனர். அடுத்ததாக ஸ்ரீகர் 9 ரன்கள், மாக்ஸ்வெல் 15 ரன்கள், டீ வில்லியர்ஸ் 11 ரன்கள், அஹ்மத் 13 ரன்கள், கிறிஸ்டின் 9 ரன்கள், ஹர்சத் 8 ரன்களை எடுத்துள்ளனர். கேப்டன் கோலி எடுத்த 39 ரன்கள் தான் அணியின் அதிகபட்ச ரன்களாகவும்.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் சுனில் நரேன் பந்துவீச்சில் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பெங்களூரு அணி வீரர்கள் தடுமாறினர். கொல்கத்தா அணியின் நரைன் 4 மற்றும் பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இதனால் பெங்களூர் அணியின் வீரர்கள் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்துள்ளனர். இதனால் அடுத்து வரும் கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!