IPL 2021 : பஞ்சாப் கிங்ஸை விட்டு வெளியேறிய கிறிஸ் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான்!

0
IPL 2021 : பஞ்சாப் கிங்ஸை விட்டு வெளியேறிய கிறிஸ் கெயில் - ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான்!
IPL 2021 : பஞ்சாப் கிங்ஸை விட்டு வெளியேறிய கிறிஸ் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான்!

UAE இல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு மனரீதியாக தன்னைத் தயார் செய்வதற்காக போதுமான ஓய்வு தேவை என கூறி கிறிஸ் கெயில் ஐபிஎல் பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிறிஸ் கெயில்:

தற்போது IPL போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் கெயில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மனரீதியாக தன்னைத் தயார் செய்வதற்கு போதுமான ஓய்வு தேவை என்பதால், அணியின் பயோ பபுள் சூழலில் இருந்து வெளியேறுவதாக கெயில் கூறியுள்ளார்.

IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா? இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!

மேலும் கடந்த சில மாதங்களாக நான் கரீபியன் பிரீமியர் லீக் பயோ-பபுள் சூழலில் இருந்தேன். அதை தொடர்ந்து நான் ஐபிஎல் பயோ-பபுள் சூழலுக்குள் வந்தேன். இப்போது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். டி20 உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் அணிக்கு உதவுவதற்காக என்னை நான் கவனம் செலுத்தப் போகிறேன்.

ஆதலால், துபாயில் சிறிய இடைவெளியும் எடுக்கப்போகிறேன். எனக்கு இந்த ஓய்வை வழங்கிய பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து கிறிஸ் கெயிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன், அவருக்கு பஞ்சாப் அணியில் பயிற்சியாளராகவும் இருக்கிறேன். அவரைப் பற்றி எனக்குத் தெரியும், எப்போதும் முழுமையான கிரிக்கெட் வீரராக இருப்பார். அவரின் டி20 உலகக் கோப்பைக்காக அவர் தயாராக வேண்டும் எனும் அவரின் முடிவை அணி நிர்வாகம் மதிக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!