IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

0
IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 125 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணி வெற்றி:

ஐபிஎல் டி.20 தொடரின் 37 வது போட்டியான இன்று ஷார்ஜா மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டி போட்டது. முதலில் போடப்பட்ட டாசில் ஐதராபாத் அணி வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கினர். ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் கூட்டணி ஆட்டமிழந்து வெளியேறியது.

இந்தியா வளர்ந்தால் உலகமும் வளரும் – ஐ.நா கூட்டத்தில் பிரதமர் உரை!

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது பெரும் ஏமாற்றத்தை தந்தது. மார்க்கம் 27 ரன்கள் மற்றும் ராகுல் 21 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளனர். ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடவில்லை. இறுதியாக 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 125 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிறந்த coaching centre – Join Now

ஹைதராபாத் அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் (2) முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனும் (1) வந்த வேகத்தில் வெளியேறினார். 7 வது வீரராக களம் இறங்கிய ஜேசன் ஹோல்டர் ஆட்டத்தின் முக்கிய புள்ளியாக மாறினார். இறுதியாக கடைசி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!