IPL 2021 – MI vs SRH: ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!

0
IPL 2021 - MI vs SRH: ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
IPL 2021 - MI vs SRH: ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!

IPL 2021 – MI vs SRH: ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டிகளில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இரண்டும் மோதும் நிலையில் மும்பை அணி ஐதராபாத் அணிக்கு இலக்காக 236 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அபார ஆட்டம்:

ஐபிஎல் டி.20 தொடரின் கடைசி லீக் போட்டியான இன்றைய போட்டி அபுதாபி மைதானத்தில் நடக்கின்றது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மணிஷ் பாண்டே தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி கொள்கின்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரும் ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களம் இறங்கினர்.

இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷன் கிஷன் இருவரும் இறங்கிய நிலையில் முறையே 18 மற்றும் 84 ரன்கள் எடுத்தனர். இஷன் இன்றைய ஆட்டத்தில் தனது அபார ஆற்றலை வெளிப்படுத்தி அணிக்கு ரன் மழையை பொழிந்தார். ஹர்டிக் 10 ரன்கள், போலார்டு 13 ரன்கள் மற்றும் சூர்யா குமார் 82 ரன்களை அடித்தனர். அடுத்ததாக வந்த நீஷம் டக் அவுட் ஆனார். க்ருனால் 9, கூல்டர்-நைல் 3 ரன்கள், சாவ்லா 0 ரன், மற்றும் கடைசி வீரரான பும்ப்ரா 5 ரன்களும் எடுத்தனர்.

தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

ஐதராபாத் அணி வீரர்கள் ஹோல்டர் 4 விக்கெட்டுகள், உம்ரன் மாலிக் 1 விக்கெட், ரஷீத் கான் 2 விக்கெட், அபிஷேக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தனர். இதனால் அடுத்ததாக களம் இறங்கும் ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!