IPL 2021 – MI vs DC: மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி!

0
IPL 2021 - MI vs DC: மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி!
IPL 2021 - MI vs DC: மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி!
IPL 2021 – MI vs DC: மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி!

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியதில் டெல்லி அணி மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டெல்லி வெற்றி:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மைதானத்தில் இன்று 46 வது தொடர் போட்டி இன்று நடைபெற்றது. அதில், ரிஷப் பண்ட் தலமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். டாசில் வென்ற டெல்லி அணியினர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த்தனர். இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங்கில் களம் இறங்கியது. ரோஹித் மற்றும் காக் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். மும்பை அணி டெல்லி அணியின் பந்து வீச்சினால் மிகவும் திணறி விட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் ஐஸ்வர்யா – கண்ணனுக்கு சப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை வீரர்களின் அதிக பட்ச ரன் சூர்யா குமார் எடுத்த 33 ரன்கள் தான். எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை எடுக்கவில்லை. இறுதியாக 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணியினர் 130 ரன்களை இலக்காக கொண்டு இறங்கியது. டெல்லி அணியில் ப்ரித்வி மற்றும் ஷிகர் இருவரும் தொடக்கத்தில் ஆட தொடங்கினர்.

PG TRB Test Pack Schedule 2021 – முழு விவரங்கள் உள்ளே!!

இருவரும் 7 பந்துகளில் முறையே 6 மற்றும் 8 ரன்களை மட்டுமே எடுத்தனர். ரிஷப் 26 மற்றும், ஷ்ரேயாஸ் 33 ரன்களை அதிக பட்சமாக எடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்கள், ஸ்டீவன் 9 ரன்களை எடுத்தனர். ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. இருப்பினும், டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை அடித்தனர். இதனால் மும்பை அணியை டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!