IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி – BCCI அறிவிப்பு!

0
IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி - BCCI அறிவிப்பு!
IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி - BCCI அறிவிப்பு!
IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி – BCCI அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் தற்போது புதிதாக 2 அணிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த அணிகளை பெறுவதற்கு ஆரம்ப விலையாக ரூ.2000 ஆக நிர்ணயம் செய்து, ஏலத்திற்கான விண்ணப்ப விவரங்களை BCCI வெளியிட்டுள்ளது.

IPL அணிகள்

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு உள்ள உலகளாவிய ரசிகர்களை இந்த IPL போட்டிகள் கொண்டுள்ளது. ஏனென்றால் உலக நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் பலரும் இந்த IPL போட்டிகளில் பங்குபெற்று வருவதால், இந்த லீக் சுற்றுகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது வழக்கம்.

கொடைக்கானலில் செப்.1 முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு – வெளியான அறிவிப்பு!

பொதுவாக 20 ஓவர்களை கொண்ட போட்டிகளாக நடத்தப்படும் IPL லீக் சுற்றுகளின் ஆரம்ப காலகட்டத்தில் மொத்தம் 10 அணிகள் இருந்தது. இந்த எண்ணிக்கை பின் நாட்களில் 8 அணிகளாக மாற்றப்பட்டு தற்போது வரை அதே எண்ணிக்கை தொடருகிறது. இந்நிலையில் IPL அணிகளுக்கான எண்ணிக்கையை மீண்டும் 10 ஆக மாற்ற BCCI முடிவு செய்துள்ளது. இது தொடர்பிலான தகவல்களும் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து BCCI இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘IPL போட்டிகளில் 2 அணிகள் புதிதாக இணைக்கப்பட உள்ளது.

இந்த அணிகளை பெற விரும்புபவர்கள் திரும்ப பெற முடியாத வகையில், ரூ.10 லட்சம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும் புதிய அணிகளை பெறும் நிறுவனங்கள் தனியாகவோ, அல்லது 2 நிறுவனங்களாகவோ இணைந்து செயல்படலாம். இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலின் படி, ரூ.10 லட்சம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டாலும், IPL அணிகளின் ஆரம்ப விலை ரூ.2000 கோடியில் இருந்து துவங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

புதிய 2 அணிகளையும் ரூ.3500 கோடி முதல் ரூ.4000 வரை விற்பனை செய்ய BCCI திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.8000 கோடி வரை லாபம் கிட்டும். அந்த வகையில் ரூ.3000 கோடி வரை டர்ன் ஓவர் கொண்டுள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமே BCCI யின் ஏலத்தில் போட்டியிட முடியும் என தெரிகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி லிமிடெட் நிறுவனம், குஜராத் அணியை வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொல்கத்தாவை சேர்ந்த கோயங்கா நிறுவனம், கேரளாவை சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆகியவை ஏலத்தில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 3 அணிகளில் ஏதாவது ஒன்று தான் உத்தரபிரதேச மாநிலத்தின், லக்னோ பெயரை கொண்ட அணியை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான IPL செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!