IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா? இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!

0
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!

IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா? இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. மோதவுள்ள இரு அணிகள் பற்றிய அலசல் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து இங்கே காணலாம்.

KKR vs PBKS இன்று மோதல்:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 45வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. பலம் வாய்ந்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசுர பலத்துடன் விளங்கும் கொல்கத்தா அணி வரிசையாக மும்பை, பெங்களூர் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி முன்னிலை பெற்று வருகிறது.

IPL 2021 – SRH vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஒரு அணியாக ஒருங்கிணைந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் தோற்று உள்ளது. தற்போது எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பஞ்சாப் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தவறுகள் ஏற்படுகிறது. ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, பூரன் என அதிரடி பேட்டர்கள் இருந்தும் கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் பெரிய ஸ்கோரினை குவிக்க முடியவில்லை. மேலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும், பீல்டிங்கில் தவறுக்கு ஏற்பட்டு வருகிறது. கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இவை அனைத்தையும் சரி செய்தால் மட்டுமே போட்டியில் வெற்றி கனியை அடைய முடியும். பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் தொற்று உள்ளதால் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் பெரிய ரன்ரேட் உடன் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. இரு அணிகளுமே இன்னும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை என்பதனால் இன்றைய ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு உதவும் என்றாலும், பந்து வீச்சு தான் அதிக அளவில் எடுபடுகிறது. எனவே இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகள் இதுவரை 28 முறை மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 18 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பஞ்சாப் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச 11 அணி விவரம்:
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (இ), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (wk), சுனில் நரைன், டிம் சவுத்தி, லோக்கி பெர்குசன், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி
  • பஞ்சாப் கிங்ஸ் – லோகேஷ் ராகுல் (c & wk), மயங்க் அகர்வால் / மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!