IPL 2021: KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

0
IPL 2021 KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா
IPL 2021 KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா

IPL 2021: KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், வெற்றி வாய்ப்பு மற்றும் அணி விவரம் குறித்த அலசலை இங்கு காணலாம்.

KKR vs DC இன்று பலப்பரீட்சை:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 41வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் கோதாவில் இறங்க உள்ளன. பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை கண்டாலும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிரட்டி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

ICC டி20 உலகக்கோப்பை போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி – பிசிசிஐ கோரிக்கை!

சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த போதிலும் சென்னை அணி அதனை சேஸ் செய்துவிட்டது. கடைசி பந்து வரை போராடிய கொல்கத்தா அணி இறுதியில் தோல்வியை தழுவியது. 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. கொல்கத்தா மட்டுமில்லாது பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் அணிகளும் இதே நிலையில் தான் உள்ளது. இதனால் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க கொல்கத்தா அணி கடுமையாக போராடும்.

டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் கட்ட துவங்கியதில் இருந்து இன்னும் தோல்வியை சந்திக்காத அணிகளில் டெல்லி அணியும் ஒன்றாகும். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறது. எந்த அணியாக இருந்தாலும், அதனை எளிதில் வீழ்த்திடும் வளமை கொண்டதாக திகழ்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லலாம். மேலும் பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய எட்டிவிட்ட நிலையில் வலுவான நிலைக்கு செல்ல முனைப்பு காட்டும். இவ்விரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு இன்றைய போட்டியில் கொல்கத்தா பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக விளங்கி வருவதால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக மைதானம் விளங்கும். இவ்விரு அணிகள் இது வரை 27 முறை மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 14 முறையும், டெல்லி அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

உத்தேச 11 அணி விவரம்:
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (இ), தினேஷ் கார்த்திக் (w), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
  • டெல்லி கேபிட்டல்ஸ் – பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மியர், ரிஷப் பந்த் (சி மற்றும் டபிள்யூ.கே), லாலி யாதவ் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் பட்டேல், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!