IPL 2021: முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? PBKS உடன் இன்று மோதல்!

0
IPL 2021 முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS உடன் இன்று மோதல்!
IPL 2021 முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS உடன் இன்று மோதல்!

IPL 2021: முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? PBKS உடன் இன்று மோதல்!

ஐபிஎல் போட்டியின் இன்றைய 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்கப் போவது யார் என்பது குறித்த அலசலை காணலாம்.

CSK vs PBKS இன்று பலப்பரீட்சை:

விறுவிறுப்பான ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 4 இன்னும் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் களமிறங்கவுள்ளன. பலம் வாய்ந்த சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று குவாலிபையர் போட்டிக்கு தயாராகி விட்டது. ஆனாலும் தனது கடைசி 2 லீக் ஆட்டத்தில் தோல்வியையே தழுவியது. அந்த இரு போட்டியிலும் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனை சரி செய்து இன்றைய போட்டியில் பழைய பார்முடன் திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை: கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு!

சென்னை அணியின் சாம் கர்ரன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி 5 வெற்றியுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. வரிசையான தோல்விகளால் தொடரை விட்டு வெளியேறி விட்டது பஞ்சாப் அணி. எனினும் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவே தீவிரம் காட்டும். பலமான பேட்டிங் வரிசையை கொண்டு இருந்தாலும் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தவிர யாரும் சோபிக்கவில்லை. பவுலிங்கிலும் மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

இன்றைய தினத்தின் வெற்றி எந்த ஒரு தாக்கத்தினையும் ஏற்படுத்தாது, எனினும் இவ்விரு அணிகளை மோதிய கடைசி போட்டியில் சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு பதிலடி தருவதற்கு பஞ்சாப் முனைப்பு காட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. சென்னை அணி 15 முறை வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது.

IPL 2021 – RCB vs SRH: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!

உத்தேச அணி விவரம்:
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா/ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (சி & வா), டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர்
  • பஞ்சாப் கிங்ஸ் – லோகேஷ் ராகுல் (c & wk), மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், தீபக் ஹூடா/சர்பராஸ் கான், ஷாருக் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here