IPL 2021: CSK vs MI பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

0
IPL 2021 CSK vs MI பலப்பரீட்சை - உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!
IPL 2021 CSK vs MI பலப்பரீட்சை - உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

IPL 2021: CSK vs MI பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

ஐபிஎல் திருவிழா நாளை முதல் (செப்.19) துவங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை vs மும்பை அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. இவை இரண்டிற்குமான மோதல் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

CSK vs MI பலப்பரீட்சை:

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை அதிக பலம் வாய்ந்த இரு அணிகள் என்றால் அது சென்னை மற்றும் மும்பை அணிகள். சர்வதேச அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் போன்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டி அது சென்னை-மும்பை மோதல் தான்.

அதிக வெற்றிகளையும், அவற்றிற்கான சதவீதத்தையும் கொண்ட அணிகளின் பட்டியலில் இவ்விரு அணிகள் தான் முதல் இரு இடங்களில் உள்ளன. மேலும் சட்டமூக வலைத்தளங்களிலும் இந்த இரு அணிகளுக்கு தான் அதிக அளவு ஆதரவு இருந்து வருகிறது. மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 3 முறையும் கோப்பை வென்றுள்ளது. அதிக முறை கோப்பையை கைப்பற்றியதும் இந்த இரு அணிகள் தான். எப்போது இவர்கள் காலத்தில் இறங்கினாலும் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

IPL திருவிழா 2021: சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!

இரு அணியிலும் சரி சம பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் இருப்பதால் கட்டாயம் இவர்களின் மோதலில் அனல் பறக்கும். போட்டி நடைபெற உள்ள துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தில் தன்மையை கணிக்க முடியாமல் ஒவ்வொரு அணி பேட்ஸ்மேனும் தடுமாறினர். ஆனால் இந்த முறை இங்கு விளையாடிய அனுபவம் பேட்ஸ்மேன்களுக்கு கை கொடுக்குமா அல்லது பந்து வீச்சாளர்கள் கையே ஓங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை அணியை பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலம் கேப்டன் டோனி தான். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் அணியை கரை சேர்ப்பதில் வல்லவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் அனைத்து கோப்பைகளை வென்ற ஒரே வெற்றி கேப்டன் என்பதனால் அணியை தற்போது வரை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதே போல் மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மிகப்பெரிய தூணாக இருக்கிறார். இது வரை 5 முறை கோப்பை வென்று தந்துள்ள அவர் புதிய சரித்திரத்தை படைத்துள்ளார். இரு அணியின் பேட்டிங் பவுலிங் முதற் கட்ட ஆட்டங்களிலேயே சிறப்பாக இருந்தது. ஆனால் சென்னை அணியில் டுபிளெசிஸ் இணையத்திருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். மும்பை அணியை பொருத்துவரை அதே அணி கலவையில் உள்ளது.

IPL திருவிழா 2021: முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!

இது வரை சென்னை-மும்பை அணிகள் நேருக்கு நேர் 32 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 19 முறை மும்பை அணியும் 13 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனின் முதற் கட்ட ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு சென்னை அணி பழி தீர்க்குமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

உத்தேச வீரர்கள் விவரம்:
  • சென்னை அணி – ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (சி & விகே), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி, ஜே ஹேசில்வுட்
  • மும்பை அணி – ரோகித் சர்மா (சி), குயின்டன் டி காக் (டபிள்யூகே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கியரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா & ட்ரெண்ட் போல்ட்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!