IPL 2021, CSK vs MI LIVE Updates : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!

0
IPL 2021, CSK vs MI LIVE Updates 20 ரன்கள் விதியசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!
IPL 2021, CSK vs MI LIVE Updates 20 ரன்கள் விதியசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!
IPL 2021, CSK vs MI LIVE Updates : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!

ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று (செப்.19) முதல் தொடங்கி உள்ளது. அதன் முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

CSK vs MI அப்டேட்ஸ் – அதிக ரன்கள் & அதிக விக்கெட்டுகள்? இரு அணிகள் இதுவரை!

CSK vs MI LIVE Updates:
  • 20வது ஓவர் – மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது
  • 19வது ஓவர் – வெற்றிக்கு இன்னும் 24 ரன்கள் தேவையான நிலையில் கடைசி ஓவர் பரபரப்பாக உள்ளது.
  • 17வது ஓவர் – வெற்றி பெறுவதற்கு இன்னும் 18 பந்துகளில் 49 ரன்கள் தேவையாக உள்ளது. காலத்தில் சவுரப் திவாரி (35) மற்றும் மில்னே (5) போராடி வருகின்றனர். மும்பை அணி 108 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • 15வது ஓவர் – க்ருனால் பாண்டியா ரன் அவுட் செய்யப்பட்டார். மும்பை அணி தற்போது 97 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் 29 ரன்களுடன் (27 பந்துகள், 3 பவுண்டரி) மற்றும் மில்னே 1 ரன்னுடனும் உள்ளனர். இன்னும் 30 பந்தில் 60 ரன்கள் வேண்டிய நிலையில் மும்பை சிக்கலில் உள்ளது.
  • 13.1வது ஓவர் – பொல்லார்ட் ஹேசில்வுட் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
  • 12வது ஓவர் – மும்பை பேட்ஸ்மேன்கள் ஸ்கோரை சேஸ் செய்வதற்கு அதிரடி பணிக்கு மாறியுள்ளனர். பொல்லார்ட் மற்றும் சவுரப் திவாரி பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்னை அதிகரித்து வருகின்றனர். மும்பை அணி 4 விக்கெட்டுகளுக்கு 84 ரன்களை குவித்துள்ளது.
  • 10வது ஓவர் – மும்பை அணிக்கு 4வது விக்கெட் விழுந்தது. பிராவோ வேகத்தில் இஷான் கிஷன் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை அணி 58 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் பொல்லார்ட் தற்போது களத்தில் இறங்கி உள்ளார்.
  • 9வது ஓவர் – மும்பை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். களத்தில் இஷான் கிஷன் மற்றும் சவுரப் திவாரி உள்ளனர். மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்துள்ளது
  • 7வது ஓவர் – மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். மும்பை அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் இஷான் கிஷன் 3 ரன் மற்றும் சவுரப் திவாரி 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
  • 5வது ஓவர் – மும்பை அணிக்கு 2வது விக்கெட் வீழ்ந்தது. மீண்டும் வேகத்தில் மிரட்டிய சஹர் அன்மோல் ப்ரீத் சிங்கை வெளியேறினார். மும்பை அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 90 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பாக செல்கிறது.
  • 3.3 ஓவர் – மும்பை அணிக்கு முதல் விக்கெட் விழுந்தது. சஹர் பந்து வீச்சில் டி காக் 17 ரன்களில் (12 பந்துகள், 3 பவுண்டரி) வெளியேறினார். மும்பை அணி 24 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. களத்தில் அன்மோல் ப்ரீத் சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் உள்ளனர்.
  • 1வது ஓவர் – டி காக் 2 ரன்கள் அன்மோல் ப்ரீத் சிங் ரன்கள் இன்றி களத்தில் உள்ளனர்.

157 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியுள்ளது.

  • 20வது ஓவர் – சிக்ஸருடன் இன்னிங்க்ஸை முடித்தார் ருதுராஜ். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்துள்ளது. கடைசி வரை களத்தில் நின்ற ருத்ராஜ் 88 ரன்கள் (58 பந்துகள், 9 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார். தற்போது மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்காக
  • 19.1வது ஓவர் – அதிரடி காட்டி சிக்ஸர் மலை பொழிந்த ப்ராவோ பும்ராஹ் பந்தில் க்ருனால் பாண்டியவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
  • 16.4வது ஓவர் – பும்ராஹ் வேகத்தில் ஜடேஜா பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஜடேஜா 26 ரன்கள் (33 பந்துகள், 1 பவுண்டரி) வெளியேற சென்னை அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது
  • 15.3 ஓவர் – ருதுராஜ் கெய்க்வாட் அரைசதமடித்தார்.
  • 15வது ஓவர் – ருதுராஜ் 46 ரன்கள் (39 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஜடேஜா 25 ரன்கள் (31 பந்துகள், 1 பவுண்டரி) எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு இன்னும் 5 ஒவர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் அதிரடி பணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வியூகம் வகுபத்ரகாண் இடைவெளி விடப்பட்டுள்ளது. சென்னை அணி 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • 13வது ஓவர் – வேகமெடுத்த சென்னை பேட்ஸ்மேன்கள் மும்பை சுழற்பந்து வீச்சை சிதறடித்தனர். பவுண்டரி, சிக்ஸர் அடித்த ருதுராஜ் 44 ரன்கள் (37பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஜடேஜா 15 ரன்கள் (21 பந்துகள், 1 பவுண்டரி) எடுத்துள்ளனர். சென்னை அணி 74-4 என்ற நிலையில் பயணிக்கிறது.
  • 10வது ஓவர் – சென்னை அணி வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்து வருவதனால் தற்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. களத்தில் களத்தில் ருதுராஜ் 25 ரன்கள் (28 பந்துகள், 3 பவுண்டரி) ஜடேஜா 7 ரன்களுடனும் உள்ளனர். சென்னை அணி 46-4 என்ற நிலையில் உள்ளது. ரன் ரேட் மிகவும் சரிந்துள்ளதால் விரைவில் அதிரடி காட்டுவர் என ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர்.
  • 7வது ஓவர் – மில்னே வேகத்தில் டோனி (3 ரன்கள்) பவுல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வரிசையாக சென்னை பேட்ஸ்மேன்கள் வெளியேறி வருவதால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். சென்னை அணி 27-4 என்ற நிலையில் உள்ளது. களத்தில் ருதுராஜ் 17 ரன்கள் (18 பந்துகள், 3 பவுண்டரி) ஜடேஜா 2 ரன்களுடனும் உள்ளனர்.
  • 3 ஓவர் – சென்னை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். மும்பை அணியின் வேகத்தில் மொயின் அலி, அம்படி ராயுடு ஆகியோர் டக் அவுட் ஆகினர். ரெய்னா 4 ரன்களில் வெளியேறி உள்ளார். சென்னை அணி 3 ஓவர்களில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • 1 ஓவர் – முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு டுபிளசி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார். ட்ரெண்ட் பவுல்ட் வேகத்தில் மில்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்துள்ளார். சென்னை அணி 1 ஓவர் முடிவில் 1/1 என்ற நிலையில் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!