IPL 2021: CSK vs KKR இன்று பலப்பரீட்சை – ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? உத்தேச 11 அணி, நேருக்கு நேர்!

0
IPL 2021: CSK vs KKR இன்று பலப்பரீட்சை - ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? உத்தேச 11 அணி, நேருக்கு நேர்!
IPL 2021: CSK vs KKR இன்று பலப்பரீட்சை - ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? உத்தேச 11 அணி, நேருக்கு நேர்!
IPL 2021: CSK vs KKR இன்று பலப்பரீட்சை – ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? உத்தேச 11 அணி, நேருக்கு நேர்!

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டி:

ஐபிஎல் 2021 சீசன் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் நோக்கில் அணிகள் முழு உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாப் கிளாஸ் பார்மில் உள்ளது முதல் 2 போட்டிகளில் இருந்தே தெளிவாகி உள்ளது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி அது இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முயற்சியில் களமிறங்குகின்றன.

IPL 2021, PBKS vs SRH: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

CSK vs KKR 38வது போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணியளவில் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் பேட்டிங்கில் அதிரடியை தொடர்ந்தால் சிக்ஸர் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 முறையும், கொல்கத்தா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் கூல் தோனி தலைமையிலான சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். இயோன் மோர்கனின் கொல்கத்தா டாப் 4 இடங்களுக்குள் தொடர இப்போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

CSK உத்தேச 11 அணி: ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

KKR உத்தேச 11 அணி: வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!