IPL 2021: CSK vs KKR – சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!!

0
IPL 2021 CSK vs KKR - சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!!
IPL 2021 CSK vs KKR - சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!!

IPL 2021: CSK vs KKR – சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!!

ஐபிஎல்லின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது.

சென்னைக்கு ரன்கள் இலக்கு:

கொல்கத்தா-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் கடந்த போட்டிகள் போல் அல்லாமல் இந்த முறை சுமாராகவே ஆடினர். சுப்மன் கில் 9 ரன்களில் (5 பந்துகள், 2 பவுண்டரி) ரன் அவுட் ஆகினார்.

தமிழகத்தில் முழுவதுமாக பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களில் (15 பந்துகள், 3 பவுண்டரி) தாகூர் பந்தில் தோனியிடம் பிடிபட்டார். கேப்டன் மோர்கனும் (8) நிலைக்கவில்லை. அதிரடி கட்டிய திரிபாதி 45 ரன்கள் (33 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்), ரஸல் 20 ரன்கள், தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் குவித்தனர். கடைசி நேரத்தில் ரன் குவிப்பதில் துரிதப்படுத்திய ராணா 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இனி ‘இது’ கட்டாயம் – தொடக்க கல்வி சுற்றறிக்கை!

இறுதியில் 20 ஒவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 171 குவித்துள்ளது. சென்னை அணி தரப்பில் கேசில்வுட், தாக்குர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 172 ரன்களை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!