ரூ.1,05,000/- சம்பளத்தில் IOCL நிறுவன வேலைவாய்ப்பு – 56 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.1,05,000/- சம்பளத்தில் IOCL நிறுவன வேலைவாய்ப்பு - 56 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.1,05,000/- சம்பளத்தில் IOCL நிறுவன வேலைவாய்ப்பு - 56 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.1,05,000/- சம்பளத்தில் IOCL நிறுவன வேலைவாய்ப்பு – 56 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IOCL ) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Non-Executive பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,05,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (10.10.2022) மட்டுமே மீதமுள்ளதால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IOCL ) வெளியிட்ட அறிவிப்பில் Non-Executive பிரிவின் கீழ்வரும் Engineering Assistant மற்றும் Technical Attendant-1 பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 56 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Engineering Assistant பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma மற்றும் Technical Attendant-1 பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்த IOCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயதிற்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Skill / Proficiency / Physical Test (SPPT) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Engineering Assistant பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.1,05,000/- வரை என்றும்,Technical Attendant-I பணிக்கு ரூ.23,000/- முதல் ரூ.78,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

NABARD வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

இந்த Non – Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் General / OBC / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற நபர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://plapps.indianoil.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று அதில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான தகவலை உள்ளீட்டு முழுவதுமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!