IOCL நிறுவனத்தில் 60+ காலியிடங்கள் – ரூ.1,27,000/- ஊதியம்..!

0
IOCL நிறுவனத்தில் 60+ காலியிடங்கள் - ரூ.1,27,000/- ஊதியம்..!
IOCL நிறுவனத்தில் 60+ காலியிடங்கள் - ரூ.1,27,000/- ஊதியம்..!
IOCL நிறுவனத்தில் 60+ காலியிடங்கள் – ரூ.1,27,000/- ஊதியம்..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Grade 3, Grade 5 பதவிகளுக்கு என மொத்தமாக 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுத்துள்ளோம். இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்கவும்.

IOCL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Grade 3 பதவிக்கு 16 பணியிடம் மற்றும் Grade 5 பதவிக்கு 46 பணியிடம் என மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12th / Diploma / B.Sc/ GNM / Graduate போன்ற பணிக்கு தகுந்தாற்போல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 வருடம் முதல் 3 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும். மேலும் அனுபவம் பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை வாசிக்கவும்.
  • விண்ணப்பதாரர் 25.02.2022 அன்றைய நாளின் படி குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Grade 5 பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.32,000/- முதல் ரூ.1,27,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Grade 3 பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.26,600/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன் பின் Document Verification க்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள்.
  • General மற்றும் OBC வகுப்பு விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / Persons with Benchmark Disabilities / Ex-Servicemen போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கான கால அவகாசம் 25.02.2022 அன்றுடன் முடிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளையுடன் (25.02.2022) கால அவகாசம் முடிவதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Click Here For IOCL Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!