இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

IOB எனப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது கடந்த மாதம் 25 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் என முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

IOB SO வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் 25 Specialist Officer (SO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும். SC/ ST /OBC/PWD/ PH விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் B.E./ B.Tech, M.E./ M.Tech, M.Sc., MCA/ MSc, Diploma போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் ரூ. 100 மற்றும் பிற விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

SO ஆக பணியமர்த்தப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.48170 முதல் அதிகபட்சம் ரூ.69810 வரை ஊதியமாக பெறுவார்கள்.

BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10,ITI படித்திருந்தால் போதும்!!

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கென கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 17.12 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!