தமிழக IOB வங்கியில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB Bank) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள Sneha Trust-ல் காலியாக உள்ள Faculty, Office Assistant, Attender பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IOB Bank – Sneha Trust |
பணியின் பெயர் | Faculty, Office Assistant, Attender |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | With in 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
- Faculty – 01 பணியிடம்
- Office Assistant – 03 பணியிடங்கள்
- Attender – 01 பணியிடம்
கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வி தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Faculty – Graduate Degree, Post Graduate Degree, MSW, MA, B.Sc, BA, B.Ed
- Office Assistant – Graduate Degree
- Attender – 10ம் வகுப்பு
வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயது வரம்பானது குறைந்தது 22 வயது எனவும், அதிகபட்சம் 40 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Faculty பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
- Attender பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Personal Interview, Demonstration / Presentation ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் Chief Manager வேலைவாய்ப்பு – ரூ.89890/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
விண்ணப்ப கட்டணம்:
Faculty / Office Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.