நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!

0
நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!
நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!
நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – IOB வங்கி வட்டி விகிதம்! ஆன்லைனில் EMI!

தற்போது இந்தியாவில் அனைத்து தனியார் வங்கிகளும் நகைகடன்களை குறைந்த வட்டிக்கு வழங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது IOB வங்கியில் சுலபமாக நகைக்கடன் பெற்று ஆன்லைன் மூலமாக வட்டி தொகையை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

IOB வங்கியில் நகைக்கடன்

தற்போது கொரோனா கால கட்டத்தில் பல்வேறு இழப்புகளை பொது மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் செலுத்திட தொடங்கின. அதில் குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடுகளை அதிக அளவு செலுத்த தொடங்கினர். இதன் மூலமாக நிதி நெருக்கடி ஏற்படும் போது தங்கத்தை வங்கிகளில் வைத்து குறைந்த வட்டியில் அதிக கடன் தொகையை பெறலாம். அத்துடன் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறுகிறது. அதனால் அதன் மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் அன்றைய தங்கத்தின் நிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும்.

ஜனவரி 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, ஓமைக்ரான் தொற்று எதிரொலி – மாநில முதல்வர் உத்தரவு!

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளும் குறைந்த வட்டியில் நகைக்கடன்களை வழங்கி வருகின்றன. அதில் குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆண்டுக்கு 7% வட்டியில் நகைக்கடன் வழங்கி வருகிறது. மேலும் பெண்களுக்கு என்று சிறப்பு நகைக்கடன்களும் அத்துடன் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு நகைக்கடன்களும் வழங்கும் திட்டங்கள் உள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தங்கத்தில் 75% வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவத்திற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இன்று முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் – சேவைகள் பாதிக்கும் அபாயம்!

நகைக்கடன் வழங்கும் போது தங்கத்தின் தூய்மை கட்டாயமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலும் தங்கத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 18 காரட்டில் இருந்து இருக்க வேண்டும். தங்க நாணயங்கள் மூலமாக கூட நகைக்கடன்களை பெற முடியும். ஆனால் 50 கிராம் வரை உள்ள தங்க நாணயங்களுக்கு மட்டும் கடன் வழங்கப்படும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகைக்கடன்களை பெறுவதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஏதேனும் 2 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகைக்கடனுக்கான வட்டியை ஆன்லைன் மூலமாக செலுத்தி கொள்ளலாம். இது தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை பெற https://www.iob.in/jwellz-loan.aspx என்ற இணையதளம் மூலமாக பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!