வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு – சேமிப்பு முதலீடு திட்டங்கள் அறிமுகம்!

0
வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு - சேமிப்பு முதலீடு திட்டங்கள் அறிமுகம்!
வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு - சேமிப்பு முதலீடு திட்டங்கள் அறிமுகம்!
வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு – சேமிப்பு முதலீடு திட்டங்கள் அறிமுகம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் முதலீடு செய்வதால் வரி விலக்கும் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து அஞ்சல் துறையில் உள்ள சிறப்பான முதலீடு திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

சேமிப்பு திட்டங்கள்

இந்திய அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சேமிப்பை வழங்குகின்றனர். அத்துடன் இதில் வங்கிகளை காட்டிலும் அதிக லாபங்களை தருகின்றனர். இதையடுத்து தற்போது அஞ்சல் அலுவலகத்தில் வரி சலுகையுடன் கிடைக்கும் சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. இதில் குறைந்தபட்சமாக ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

TN Job “FB  Group” Join Now

இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் முதலீட்டு பணத்திற்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகையும் கிடைக்கிறது. இதையடுத்து தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திலும் பிரிவு 80Cயின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை கிடைக்கிறது. அடுத்ததாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தனியார் மற்றும் அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இணைய முடியும். இது ஓய்வூதிய வடிவில் சேமிப்பு தொகையை தருகிறது.

இனி இணைய வழியில் தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டம் – அஞ்சலகத்தில் புதிய அறிமுகம்!

இந்த திட்டத்திலும் வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வரி சேமிப்பு ஃபிக்சட் டெப்பாசிட்கள் என்ற திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளை கொண்டது. இத்திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை பெற முடியும். இதனை அடுத்து வீட்டுக் கடன் செலுத்துதல், ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், சுகாதார காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்டவற்றில் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கும் வரி சலுகைகள் கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here