மோசடிகளை தடுக்கும் புது வித ஆதார் அட்டை அறிமுகம் – பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

0
மோசடிகளை தடுக்கும் புது வித ஆதார் அட்டை அறிமுகம் - பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!
மோசடிகளை தடுக்கும் புது வித ஆதார் அட்டை அறிமுகம் - பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!
மோசடிகளை தடுக்கும் புது வித ஆதார் அட்டை அறிமுகம் – பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளில் ஒன்றான ஆதார் மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. தற்போது பல்வேறு வகைகளில் மோசடிகள் நடைபெறுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஆதாரை பாதுகாப்பாக பயன்படுத்த ஒரு சூப்பரான வழிமுறையை அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அதனால் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. ஆதார் அட்டையில் 12 இலக்க தனிப்பட்ட ஐடி இடம் பெற்றிருக்கும்.

Exams Daily Mobile App Download

தற்போது பல்வேறு வகையில் மோசடிகள் ஏற்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு நாளும் மோசடிகளை நிகழ்த்த புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதனால் UIDAI ஆனது மறைக்கப்பட்ட ஆதார் ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடி விருப்பத்தை வழங்கியுள்ளது. அதன்படி இதில் 12 இலக்க ஆதார் எண் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதில் கடைசி 4 இலக்கம் மட்டும் அனைவருக்கும் தெரியும்படி இடம்பெற்றிருக்கும். இதில் முதல் 8 இலக்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதனால் ஆதார் கார்டு தொலைந்து போனாலும் அதனை பயன்படுத்தி மோசடி செய்ய முடியாது.

மறைக்கப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

1. முதலாவதாக https://uidai.gov.in/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, ‘ஆதாரைப் பதிவிறக்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது 12 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும். இதையடுத்து ‘எனக்கு மறைக்கப்பட்ட ஆதார் வேண்டும்’ என்பதற்கு அருகில் உள்ள BOX-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். அடுத்ததாக ‘ஓடிபி அனுப்பு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!

4. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். OTP எண்ணை உள்ளிட்டு ‘ஆதாரைப் பதிவிறக்கு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. மேலும் இது PDF வடிவத்தில் இருக்கும் மற்றும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படும். இதற்கான கடவுச்சொல் ஆதார் அட்டையின் முதல் பெயரின் முதல் 4 எழுத்துக்களை ஆங்கிலத்தில் உள்ளிட வேண்டும். இதையடுத்து நீங்கள் பிறந்த ஆண்டு YYYY என்று உள்ளிட்ட வேண்டும்.

6. இது தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இத்தனையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!