Gmail சேவையில் புதிய ஆப்லைன் அம்சம் அறிமுகம் – எப்படி செயல்படுத்துவது? முழு விவரம் இதோ!

0
Gmail சேவையில் புதிய ஆப்லைன் அம்சம் அறிமுகம் - எப்படி செயல்படுத்துவது? முழு விவரம் இதோ!
Gmail சேவையில் புதிய ஆப்லைன் அம்சம் அறிமுகம் - எப்படி செயல்படுத்துவது? முழு விவரம் இதோ!
Gmail சேவையில் புதிய ஆப்லைன் அம்சம் அறிமுகம் – எப்படி செயல்படுத்துவது? முழு விவரம் இதோ!

தற்போது ஆப்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிமெயில் சேவைகள் இணையம் இல்லாமல் மின்னஞ்சல்களை அனுப்புவது, செய்திகளை படிப்பது, பதிலளிப்பது ஆகியவற்றை அனுமதிக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஜிமெயில் சேவைகள்

கூகுள் நிறுவனம் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. ஒரு பயனர் பொதுவாக ஜிமெயிலை இணைய உதவியுடன் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு மூலம் அணுக முடியும். இந்த ஜிமெயில் சேவையானது இப்போது ஆஃப்லைன் முறையில் இயங்குவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆஃப்லைன் அம்சம், ஜிமெயிலில் வரும் செய்திகளை இணைய உதவியுடன் படிக்க அல்லது பதிலளிக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.

இந்த ஆஃப்லைன் அம்சம் இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கூகுள் அளித்துள்ள தகவலின்படி, ஆப்லைன் அம்சமானது இணையத்துடன் இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படாத நிலையிலும் ஜிமெயில் செய்திகளைப் படிக்கவும், பதிலளிக்கவும், தேடவும் பயனர்களை அனுமதிக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்த, உங்கள் பள்ளி அல்லது வேலை கணக்குடன் உங்கள் ஜிமெயில் இணைக்கப்பட்டிருந்தால் அதை மாற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

Exams Daily Mobile App Download

இது தவிர இந்த Gmail ஆப்லைன் அம்சம் Google Chromeல் வேலை செய்யாமல், சாதாரண பயன்முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூகுள் கூறுகிறது. இப்போது, கூகுள் விளக்கியபடி Gmail ஆஃப்லைன் பயன்முறையை இயக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்,

  • அந்த வகையில், முதலாவதாக mail.google.com இணைப்பை திறக்கவும்.
  • இன்பாக்ஸில், Settings அல்லது Cogwheel பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து, See All Settings என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பின்னர் Offline ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இதில் Enable offline mail என்ற தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஜிமெயில் இப்போது புதிய அமைப்புகளைக் காண்பிக்கும்.

  • உங்கள் Gmail உடன் சிங்க் செய்ய விரும்பும் மின்னஞ்சல்களின் நாட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  • இப்போது கூகுள் உங்கள் கணினியில் எஞ்சியிருக்கும் இடத்தைக் காண்பிக்கும். மேலும் கணினியில் ஆஃப்லைன் தரவை வைத்திருப்பதற்கான விருப்பத்தையும் வழங்கும்.
  • அதே போல கணினியிலிருந்து அனைத்து ஆஃப்லைன் தரவையும் அகற்றுவதற்கான விருப்பமும் இதில் உள்ளது.
  • இப்போது Save Changes என்ற விருப்பத்தைக் கிளிக் செய்வும்.
  • இதன் மூலம் Gmail ஆஃப்லைனில் உங்கள் கணினியில் செயல்படுத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!