SBI வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச எண் அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!

0
SBI வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச எண் அறிமுகம் - அறிவிப்பு வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச எண் அறிமுகம் - அறிவிப்பு வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச எண் அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வங்கி வாடிக்கையாளர்கள் இனி விடுமுறை தினங்களிலும் வங்கி சேவையை மேற்கொள்ளலாம்.

எஸ்பிஐ:

இந்தியாவில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. மேலும் தொற்று பரவும் நேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் சேவைகள் வழங்கப்பட்டது. வங்கிக்கு வருவதை தவிர்த்து ஏடிஎம் மற்றும் இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது பெரும்பாலும் வங்கி வேலைகளை ஆன்லைன் மூலமாகவே முடித்து விடுகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கும் ஞாயிற்று கிழமைகளிலும் வங்கி சேவை அளிக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கான இலவச உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1800 1234 அல்லது 1800 2100 என்ற இந்த இலவச உதவி எண்கள் மூலம், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே சேவைகளை பெற முடியும் இனிமேல் 44 கோடி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் கூட வங்கிச் சேவையை பெற முடியும். வங்கிக்கு வர வேண்டிய தேவையை இருக்காது. உங்களது வங்கித் தொடர்பான நடவடிக்கைகளை பற்றி இனி கவலைப்பட வேண்டாம். எஸ்பிஐயின் இலவச உதவி எண்களுக்கு அழைத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இதன் மூலம் 24×7 முறையில் வங்கிச் சேவையை பெற முடியும். இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருக்கும் தொகை, கடைசியாக நடந்த 5 பண பரிவர்த்தனைகள், காசோலையின் நிலை, ஏதேனும் காரணத்தால் ஏடிஎம் அட்டை ரத்து செய்யப்பட்டால், புதிய ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகளைப் பெற முடியும். ஏற்கனவே வங்கி சார்ந்த வேலைகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இலவச உதவி எண்ணும் வழங்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!