ஆவின் பால் நிறுவனத்தில் புதிய பால் பொருட்கள் அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!

0
ஆவின் பால் நிறுவனத்தில் புதிய பால் பொருட்கள் அறிமுகம் - அமைச்சர் அறிவிப்பு!
ஆவின் பால் நிறுவனத்தில் புதிய பால் பொருட்கள் அறிமுகம் - அமைச்சர் அறிவிப்பு!
ஆவின் பால் நிறுவனத்தில் புதிய பால் பொருட்கள் அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!

சென்னை ஆவின் பால் நிலையத்தில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தினார். மேலும் பால் பொருட்களின் விலை நிர்ணயங்கள் குறித்து இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ஆவின் பால் நிலையம்:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இவற்றில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக பால் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் உணவு பொருட்களின் மீது விதித்த வரி விதிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன.

இதன் காரணமாக சில தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் விலை உயர்வால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு நல்ல தீர்வினை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை தவிர அரசின் மூலம் நடத்தப்படும் ஆவின் பால் நிலையங்கள் மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் தீவிர முயற்சியால் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் விளம்பரம்? அரசின் புதிய திட்டம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் மக்களின் வசதிக்கேற்ப ஆவின் நிறுவனம் பத்து புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய பொருட்களான 200 மி.லி. Cold Coffee ரூ.35, 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மி.லி. பாஸந்தி ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து ஆவின் குடிநீர் பாட்டில் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here