தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – புதிய வகுப்புகள் அறிமுகம்! அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - புதிய வகுப்புகள் அறிமுகம்! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - புதிய வகுப்புகள் அறிமுகம்! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – புதிய வகுப்புகள் அறிமுகம்! அமைச்சர் தகவல்!

உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சி மிக அவசியம். எனவே தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் .

புதிய வகுப்புகள்:

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. மேலும் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் வழங்கப்படும். மாணவா்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

நேற்று, பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 415 மாணவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சமகோண ஆசனத்தில் அமர்ந்து சாதனை நடத்த தொடங்கினார்கள். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ!

இதில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘73 பேர் எனது திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்தவர்கள் வந்துள்ளது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் யோகா நடத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது கூறி இருந்தார். இதை தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று நடக்க நடவடிக்கை எடுப்பேன். யோகா தேவையான ஒன்றுதான் உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்து கொள்ள தேவையான ஒன்று. கருணாநிதி வயது முதிா்ந்த காலத்திலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டாா் என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!