சென்னைவாசிகள் கவனத்திற்கு – கொசு மருந்து தெளிக்க இலவச எண் அறிமுகம்!

0
சென்னைவாசிகள் கவனத்திற்கு - கொசு மருந்து தெளிக்க இலவச எண் அறிமுகம்!
சென்னைவாசிகள் கவனத்திற்கு - கொசு மருந்து தெளிக்க இலவச எண் அறிமுகம்!
சென்னைவாசிகள் கவனத்திற்கு – கொசு மருந்து தெளிக்க இலவச எண் அறிமுகம்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க மாநகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்கள் அறிமுகப்படுத்தப்படுள்ளது.

கொசு ஒழிப்பு:

கொசு மூலம் மலேசியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கொசு மூலம் பரவும் டெங்குவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் வீதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள கழிவு நீரில் கொசுக்கள் அதிகம் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது.

Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் – தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!

அதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் 2,129 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்த பணியாளர்கள் என, மொத்தம் 3,619 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் கொசுவை ஒழிக்க முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொது இடங்களில் கொசு அதிகமுள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!