இந்திய குடிமக்களுக்கு இனி இ-பாஸ்போர்ட் அறிமுகம் – அமைச்சர் விளக்கம்!

0
இந்திய குடிமக்களுக்கு இனி இ-பாஸ்போர்ட் அறிமுகம் - அமைச்சர் விளக்கம்!
இந்திய குடிமக்களுக்கு இனி இ-பாஸ்போர்ட் அறிமுகம் - அமைச்சர் விளக்கம்!
இந்திய குடிமக்களுக்கு இனி இ-பாஸ்போர்ட் அறிமுகம் – அமைச்சர் விளக்கம்!

பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்க இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் சேவா திட்டம்

இந்தியாவில் இருந்து பலர் அடிக்கடி சர்வதேச பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் அனுபவத்தையும் பொது விநியோகத்தையும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், நமது நாட்டு குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை சரியான நேரத்தில், நம்பகமான, அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் வழங்க மத்திய பாஸ்போர்ட் அமைப்புடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

Exams Daily Mobile App Download

கொரோனா பேரிடர் காலத்திலும் கூட பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் சரியாக நடைபெற்றதை பற்றி அமைச்சர் பேசினார். இது குறித்து அவர் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் தேவைகள் அதிகமாக இருந்த போதும் கடந்த ஒரு மாதத்தில் 4.50 லட்சம் கூடுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், சராசரியாக 9 லட்சம் என்ற மாதாந்திர சராசரியுடன் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். மக்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் முயற்சிகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.

மத்திய அரசில் 50+ காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து அதிகமாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக பாஸ்போர்ட் சேவா திட்டம் (Passport Seva Programme ), வெகுவிரைவில் PSP V2.0-ஐ தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. PSP V1.0-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட்-போட், அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான சேவை வழங்கப்படும். மேலும் இந்திய குடிமக்களுக்கான இ-பாஸ்போர்ட்டுகளை வெளியிடவும் அமைச்சகம் தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!