WhatsApp செயலியின் புதிய அம்சம் அறிமுகம் – பயன்படுத்தும் எளிய வழிகள்!

0
WhatsApp செயலியின் புதிய அம்சம் அறிமுகம் - பயன்படுத்தும் எளிய வழிகள்!
WhatsApp செயலியின் புதிய அம்சம் அறிமுகம் - பயன்படுத்தும் எளிய வழிகள்!
WhatsApp செயலியின் புதிய அம்சம் அறிமுகம் – பயன்படுத்தும் எளிய வழிகள்!

வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புதிய அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது கால்களை இணைக்க புதிதாக லிங்க் உருவாகும் அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.

WhatsApp அப்டேட்:

முன்னதாக ஜூம் மற்றும் கூகுள் மீட் செயலிகளில் உள்ளது போல் வாட்ஸ்அப்பில் ஆடியோ அல்லது வீடியோ கால்களை உருவாக்க லிங்குகளை உருவாக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS/iPhone பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்த புதிய அம்சம் உங்கள் மொபைலில் செயல்படவில்லை என்றால் உடனடியாக வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து பார்க்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

முதலில், உங்கள் வாட்ஸ்அப்பை 2.22.21.83 இன் லேட்டஸ்ட் அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து இந்த செயல்பாடு உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும். இப்போது இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று கீழே முழுமையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கருணை மதிப்பெண் குறித்த வழக்கு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download
வழிமுறைகள்:
  • வாட்ஸ்அப்பில் சென்று ‘Calls’ பிரிவை தேர்தெடுக்கவும்.
  • அதில், ‘Create call link – share a link for your WhatsApp call’ என்று மேலே இருக்கும்.
  • ‘அழைப்பு இணைப்பை உருவாக்கு’ என்பதை தேர்வு செய்து, அதில் உங்களுக்கு நார்மல் மற்றும் வீடியோ அழைப்பிற்கான இணைப்பும் காண்பிக்கப்படும்.
  • இணைப்புக்கு கீழே Call type, send link via WhatsApp, Copy link and Share link என்ற 4 தேர்வுகள் இருக்கும்.
  • இப்போது நீங்கள் வீடியோ அழைப்பு இணைப்பை ஆடியோ அழைப்பாக மாற்ற விரும்பினால், ‘அழைப்பு வகை’ என்பதை கிளிக் செய்யவும்.
  • வீடியோ மற்றும் குரல் என்று அழைப்பு வகையின் கீழ் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
  • இப்போது, நீங்கள் வாட்ஸ்அப்பில் இணைப்பைப் பகிர விரும்பினால், ‘வாட்ஸ்அப் வழியாக இணைப்பை அனுப்பு’ என்பதை தேர்வு செய்யவும்.
  • நீங்கள் இணைப்பை நகலெடுக்க விரும்பினால், ‘இணைப்பை நகலெடு” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!