வாட்ஸ் அப் செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மெசேஜ் செய்வதில் புதிய வசதி அறிமுகம்!

0
வாட்ஸ் அப் செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மெசேஜ் செய்வதில் புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மெசேஜ் செய்வதில் புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மெசேஜ் செய்வதில் புதிய வசதி அறிமுகம்!

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல அம்சங்களை வாட்ஸ் அப் செயலி கொண்டுள்ளது. இவ்வாறு பல வகையில் உபயோகமாக இருக்கும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் தற்போது அப்டேட்டுகள் விடப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட் :

உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களை கொண்டுள்ளது. கொரோனா வருகையால் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது வாட்ஸ்அப் பயனுள்ள கருவியாகவும், முக்கிய உதவிகரமான ஒன்றாகவும் செயல்பட்டது. இத்தகைய வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை கவரும் வண்ணம் புதிய புதிய அப்டேட்டுகளை மாதம் ஒரு முறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ஸ்அப் செயலியில் தற்போது மேலும் பல புது சிறப்புகளை நிறுவனம் நிறுவியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேற்குறிப்பிட்ட அம்சங்களை தவிர்த்து சில சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. அப்படி அனுப்பப்படும் ஃபைல்கள் ஒரு குறிப்பிட்ட சைசுக்கு இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவுக்கு வாட்ஸ்அப் செயலி அப்டேட்டுகளை மேம்படுத்தியுள்ளது.

மூர்த்தி ஆபரேசனுக்கு பணம் கிடைக்காமல் அலையும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றுள்ள கூடுதல் அப்டேட்டுகள் :

1. அறிமுகம் இல்லாதவரின் மொபைல் எண்ணை சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு டைரக்ட் மெசேஜ் செய்யும் புதிய அம்சம்.

2. ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி.

3. வாட்ஸ்அப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி.

4. வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதி.

5. பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதி

என மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் தற்போது அறிமுகமாகி நடைமுறையில் இருந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here