விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் கவனத்திற்கு – அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்கள் கவனத்திற்கு - அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்கள் கவனத்திற்கு - அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் கவனத்திற்கு – அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!

வரும் ஞாயிற்று கிழமையான அக்டோபர் 3ம் தேதி அன்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து இந்த வருடம் 5ம் சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. முதன்முதலாக இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. இந்தியில் 13 சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்த இருக்கும் போது நிகழ்ச்சியின் வடிவம் குறித்து அந்த அளவிற்கு மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருந்தது. பின்னர், முதல் சீசன் ஒளிபரப்பாகும் போது மக்கள் புரிந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சையான நிகழ்வுகளும் இருப்பதால் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து விடும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை – CEO உத்தரவு!

கடந்த 4 சீசன்களாக உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த வருடம் வேறு பிரபலம் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் முதலில் வெளியாகியது. ஆனால் வழக்கம் போல் கமல் அவர்களே இந்த சீசனிலும் தொகுத்து வழங்குகிறார் என்ற என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் குஷியாகி விட்டனர். முதலில் வெளியான டீசர் முதல் அடுத்தடுத்து 3 ப்ரோமோக்கள் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் இந்த முறை முழு அரசியல் பிரவேசத்திற்கு பிறகு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், பல ருசிகரமான கருத்துக்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் – கேஷ்பேக் உடன்!

அதேபோல், ப்ரோமோக்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காட்சிகள் மற்றும் டயலாக்குகள் கவனிக்க தக்க வகையில் உள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்ட பிரபலங்கள் பலர் பிரபல ஹோட்டலில் இருப்பதாய் போல் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் ஒளிபரப்ப இருப்பதாக ப்ரோமோய் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!