தமிழகத்தில் தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணல் – நாளை துவக்கம்!

0
தமிழகத்தில் தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணல் - நாளை துவக்கம்!
தமிழகத்தில் தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணல் - நாளை துவக்கம்!
தமிழகத்தில் தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணல் – நாளை துவக்கம்!

தமிழகத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் உள்ள தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நாளை (ஜூலை 3) நேர்காணல் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

செவிலியர் பணி

கொரோனா பேரலை காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையில் தற்போது கொரோனா பரவல் வீதம் குறைந்து வருவதால் துணை சுகாதார நிலையங்களில் உள்ள தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 5 முதல் RTE மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் பதிவேற்றம்!

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையங்களில் 20 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கான தற்காலிக பணியாளர்களை நியமிக்க நேர்காணல் நடைபெற உள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.11,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். B.Sc நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

அவர்கள் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். இந்த தகுதியுடைய நபர்கள் கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தங்களது கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அவற்றை நாளை (ஜூலை 3) காலை 10 மணியளவில் நடைபெறும் நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here