பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

0
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தொழில் நிறுவன பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்றது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 23 வரை இரவு ஊரடங்கு ரத்து – கடைகளின் இயக்க நேர கட்டுப்பாடுகள் நீக்கம்!

அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தொழில் நிறுவன பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களில் நேரடி கள பயிற்சிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் ஆன்லைன் மூலம் தொழிற்பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாணவர்கள், தங்களுக்கான தொழில் நிறுவன பயிற்சியை ஸ்வயம் அல்லது திறந்தநிலை இணையவழி திட்டம் மூலமாக மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் முறையாக பயிற்சி மேற்கொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கள பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பொறியியல் படிப்பிற்கான பல்கலை சான்றுடன் இணைக்கப்படும். மேலும் புதிய அறிவிப்பு இந்த ஆண்டிற்கு மட்டுமே என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!