
மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 19) இணைய சேவைகளுக்கு தடை – அதிர்ச்சியில் பொதுமக்கள்! அரசின் அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தானி தலைவரும் வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் துரத்தி சென்று கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாபின் பல மாவட்டங்களில் நாளை (மார்ச் 19) வரை மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய தடை
காலிஸ்தானி தலைவரும் வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது உதவியாளர்களை 50க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் துரத்தி செல்கின்றன. மேலும் ஷாகோட் அருகே பிரிவினைவாத தலைவரின் சமீபத்திய இருப்பிடத்தை பஞ்சாப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் காரணமாக பஞ்சாபின் பல மாவட்டங்களில் பொதுமக்கள் நலன் கருதி நாளை (மார்ச் 19) வரை மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் பஞ்சாபின் பிராந்திய அதிகார வரம்பில் உள்ள அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து டாங்கிள் சேவைகளும், குரல் அழைப்பு தவிர அனைத்தும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என உள்துறை மற்றும் நீதித்துறை சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.