இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இணையவசதி – ஆய்வு முடிவுகள் வெளியீடு!
இந்தியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் இருந்து 39% பள்ளிகளில் மட்டுமே கணினி பயன்பாடுகளும், 22% பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பும் இருப்பதாக ஆய்வு தகவல் கூறுகிறது. இது தவிர பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையவசதி
ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் கல்வி (UDISE) குழுமத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் சராசரியாக 37.13% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் செயல்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் 22.28% பள்ளிகளுக்கு மட்டுமே இணைய வசதி உள்ளது என ஆய்வு தகவல் கூறுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 28.55% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 11.58% பள்ளிகளில் இணைய வசதி உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. எனினும் இந்த சதவீதமானது முந்தைய ஆண்டை விட முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.4000 வழங்க தடை? நீதிமன்றம் முடித்து வைப்பு!
அந்த வகையில் கடந்த ஆண்டை விட கணினி வசதிகளில் சுமார் 6% மும், இணைய இணைப்பு சுமார் 3.5% மும் அதிகரித்துள்ளது. இது தவிர 2019-20 ஆம் ஆண்டில் 83% க்கும் மேற்பட்ட பள்ளிகள் மின்சார வசதியை பெற்றுள்ளது. இது முந்தைய 2018-19 ஆண்டை விட கிட்டத்தட்ட 7% அதிகரித்துள்ளது. இருப்பினும், இதுவரை 80.16% பள்ளிகளில் மட்டுமே மின்சார இணைப்பு பயன்பாட்டில் உள்ளது. மேலும் 2012-13 ஆம் ஆண்டை கணக்கிடுகையில் சுமார் 54.6% பள்ளிகளில் மின்சாரம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 84% க்கும் மேற்பட்ட பள்ளிகள் 2019-20 ஆம் ஆண்டில் ஒரு நூலகம் அல்லது வாசிப்பு அறை இருந்தது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 4% முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும் 2019-20 ஆம் ஆண்டில் 82% க்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டான 2018-19 ஐ விட 4% க்கும் அதிகமாகும். மேலும் 93.77% பள்ளிகளில் குடிநீர் வசதி செயல்பாடுகளும், 93.23% பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதே நேரத்தில் இருபாலர் பயிலும் பள்ளிகளில் 91.07% சிறுவர்களின் கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர 20.66% பள்ளிகளில் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்கு என செயல்பாட்டு கழிப்பறைகள் உள்ளது. தொடக்கக் கல்விக்கான DISE மற்றும் இடைநிலைக் கல்விக்கான SEMIS ஐ ஒருங்கிணைப்பதன் மூலம் 2012-13 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 8.5 மில்லியன் ஆசிரியர்கள் மற்றும் 250 மில்லியன் மாணவர்கள் உள்ளனர் என புதுப்பிக்கப்பட்ட பதிப்பு தெரிவிக்கிறது.