தமிழகத்தில் சர்வதேச மாரத்தான் போட்டி – முதல் பரிசு 1 லட்சம் ரூபாய்! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சர்வதேச மாரத்தான் போட்டி - முதல் பரிசு 1 லட்சம் ரூபாய்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் சர்வதேச மாரத்தான் போட்டி - முதல் பரிசு 1 லட்சம் ரூபாய்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் சர்வதேச மாரத்தான் போட்டி – முதல் பரிசு 1 லட்சம் ரூபாய்! அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் வருகிற 7ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரத்தான் போட்டி:

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இவர் இதுவரை 5 முறை தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பில் இருந்த இவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக நலத்திட்டங்களை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தியதில் அவரின் தொண்டு இன்றியமையாதது. மேலும் நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் பல சாதனைகளை செய்தார். அரசியலை தாண்டி கலை துறையிலும் ஈடுபட்டார். அவர் தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Exams Daily Mobile App Download

இவர் உடல் நலக்குறைவால் கடந்த 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். 2022ம் ஆண்டு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மாரத்தான் போட்டி நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். சுமார் 40,000 இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PM கிசான் யோஜனா திட்ட பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கால அவகாசம் நிறைவு

இப்போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை நடைபெற உள்ளது. இதில் 42 கி.மீ மற்றும் 21.1 கி.மீ பிரிவுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் ரூபாயும் 2-ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு 25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.15 ஆயிரம் ஆகும். அதே போல 5 கி.மீ., பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு 10 ஆயிரம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!