ஜூன் 2018 – சர்வதேச செய்திகள்

0

ஜூன் 2018 – சர்வதேச செய்திகள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் சர்வதேச செய்தி விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன்  சர்வதேச செய்திகள் PDF பதிவிறக்கம் செய்ய

சர்வதேச செய்திகள் – ஜூன் 2018:

சிங்கப்பூரில் பூவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்

  • பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் தேசிய ஆர்க்கிட் கார்டனுக்கு வருகை தந்தை நினைவு கூரும் வண்ணமாக அவரது பெயரை டென்ட்ரோபியம் நரேந்திர மோடி என்று சிங்கப்பூர் அரசு ஒரு பூவிற்கு சூட்டியுள்ளது.

பெண்களுக்கு முதல் ஓட்டுநர் உரிமம்

  • சவூதி அரேபியா பல ஆண்டுகளுக்குப்பிறகு பெண்களுக்கு முதல் ஓட்டுநர் உரிமம் வழங்கத் தொடங்கியது.

கவுதமாலாவில் வெடித்து சிதறிய பியுகோ எரிமலை

  • கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் உள்நாட்டில் தயாரான எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து தயாரிக்கப்பட்டது

  • சீனாவில் உள்நாட்டிலேயே தறிக்கப்பட்ட, நீண்ட காலமாக வேலைசெய்யக்கூடிய எச்.ஐ.வி. மருந்து அல்புவிர்டைடு (Albuvirtide), பல்லாயிரக்கணக்கான எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரமாக இருக்கலாம் என்று சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தின் 125 வது நினைவு நாள்

  • மகாத்மா காந்தி பியட்மேரிட்ஜ்ஸ்பர்க்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, பிரிட்டனின் பாரபட்சமான விதிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மக்களை அணிதிரட்டிய வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் ஒரு மூன்று நாள் தொடர் நிகழ்வு அவரின் வாழ்க்கை வரலாற்றை திரையிடும் போது குறிக்கப்பட்டது.

 சீனாவில் உலகின் முதல் EPR அணு உலை

  • மூன்றாம் தலைமுறை ஐரோப்பிய அழுத்த அணு உலை சீனாவின் டைஷன் எனும் இடத்தில் அதன் முதல் கட்ட மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்திய விவசாயி உலக சாதனை படைத்துள்ளார்

  • ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள கேரளாவைச் சேர்ந்த இந்திய விவசாயி சுதேஷ் குருவாயூர், ஷார்ஜாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான (4,914) கரிம கறிவேப்பிலை கன்றுகளைஷார்ஜாவில் விநியோகித்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேசியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்குகளை வென்றது

  • மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு இடத்திற்கு போட்டியிட்டன, மாலத்தீவுக்கு 46 வாக்குகள பெற்றது இந்தோனேசியா 144 வாக்குகளைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் பெண்கள் வாக்களிக்கும் 100 ஆண்டுகால உரிமையைக் கொண்டாடுகின்றனர்

  • யு.கே. இல் முதன் முதல் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் வெற்றி பெற்றதில் இருந்து, 100 ஆண்டுகளை சென்றதையொட்டி பிரிட்டிஷாரில் ஆயிரக்கணக்கான பெண்கள் அதை கொண்டாடினர்.

UNSC இன் நிரந்தரமற்ற உறுப்பினர்கள்

  • ஐ.நா. பொதுச் சபை ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பணியாற்றுவதற்காக பெல்ஜியம், டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா மற்றும் தென் ஆபிரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

For English – June International Affairs PDF Download

 

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!