அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு – விரைவில் இறுதி அறிக்கை!
தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி முருகன் தலைமையிலான ஆணையம் விரைவில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது.
அரசு ஆணையம்:
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதி கல்லூரிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி முருகன் தலைமையில், 9 பேர் குழு கொண்ட ஆணையம் ஒன்றை அமைத்தது.
தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
அரசின் இந்த குழு மாணவர்களின் சமூக பொருளாதாரம், அவர்களின் பிரச்சனைகள் குறித்து கண்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலைமையினால் அவர்களால் தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் சேர முடியவில்லை என்றால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி முருகன் அவர்கள்,தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனியார் பள்ளி மாணவர்களாக இருப்பதாகவும், 10 சதவீதத்துக்கும் குறைவான அரசுப்பள்ளி மாணவர்களே தொழிற்படிப்புகளில் சேர்ந்து வருவதாகவும் கூறினார்.
TN Job “FB
Group” Join Now
அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர முடியாததற்கு பல காரணங்கள் உள்ளது. உள்ஒதுக்கீடு வழங்குவதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை அளிப்பதா என்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இது தொடர்பான இருந்து அறிக்கை வரும் 18ம் தேதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அறிவித்துள்ளார்.