“பாக்கியலட்சுமி” சீரியல் எழிலுக்கு இவ்ளோ திறமையா? பல புதிய தகவல்கள்!

0
"பாக்கியலட்சுமி" சீரியல் எழிலுக்கு இவ்ளோ திறமையா? பல புதிய தகவல்கள்!
“பாக்கியலட்சுமி” சீரியல் எழிலுக்கு இவ்ளோ திறமையா? பல புதிய தகவல்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலின் மூலமாக புகழ் பெற்ற நடிகர் விஷால் (எழில்) பற்றி தெரியாத தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பாக்கியலட்சுமி எழில்:

விஜய் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, “பாக்கியலட்சுமி” தான். இந்த சீரியலில் குறிப்பாக அனைவருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது எழில் தான். இவரது உண்மையான பெயர் விஷால். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகர் விஷால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “அது இது எது” நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தாராம். இவர் அதே போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

சன் டிவி “ரோஜா” சீரியலில் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் – வெளியான ப்ரோமோ!!

சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்பு விஜேவாக தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றி உள்ளாராம். முதன் முதலாக “கால் பண்ணா காசு” என்று தனியார் தொலைக்காட்சியான வெளிச்சம் என்ற டிவியில் விஜேவாக வேலை பார்த்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசும் போது பலர் அவரது குரல் மற்றும் பேச்சு நன்றாக இருப்பதாக கூறி உள்ளார்களாம். அதே போல் இவருக்கு அப்போதில் இருந்து பெண் ரசிகைகள் மிகவும் அதிகமாம். பின்னர், வேந்தர் டிவியில் “துள்ளுவதோ இளமை” என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி உள்ளார். அப்போது தான் இவருக்கு “பாக்கியலட்சுமி” சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். இதனை சரியாக விஷால் பயன்படுத்தி கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

நடிப்பு மற்றும் பேச்சுத் திறமை மட்டுமல்லாமல் விஷாலுக்கு ஆடல் திறமையும் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். கூடுதலாக இவர் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் நடிக்க வேண்டி இருந்ததாம். ஆனால், அப்போது உடல் நிலை சரியில்லாததால் அவரால் நடிக்க இயலவில்லை. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இவருக்கு பல பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அவர்களுக்காக விஷால் தொடர்ந்து போட்டோ ஷூட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!