வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு – பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!

0
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு – பிரபல அரசு வங்கி முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டுக் கடன் வட்டி குறைத்து அரசு வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வட்டி குறைப்பு:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன், வாகனக்கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு கடன்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சில வங்கிகளில் கட்டணம் ரத்து உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

அக்.29 பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மற்ற வங்கிகளை தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா தனது தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மற்ற அனைத்து வங்கிகளுடன் ஒப்பிடும்போது குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி குறைப்பானது அக்டோபர் 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!

இந்த சலுகையானது வாடிக்கையாளர்களை பொருத்து வழங்கப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் 800க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே குறைவாகவும், மற்றவர்களுக்கு அதிகமான வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கொடாக் மஹிந்திரா வங்கி தான் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கியாக இருந்து வந்தது. இந்த வங்கியில் 6.5 % வட்டி கணக்கிடப்படுகிறது. இவ்வாறு மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டியில் கடன் வழங்குவதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here