SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! முழு விபரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! முழு விபரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! முழு விபரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! முழு விபரம் இதோ!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 10 bps வரை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (டிச.15) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வட்டி விகிதம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தியதன் மூலம் தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருக்கும். இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பின் படி, ‘SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்துள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை தரக்குறைவாக பேசிய பிக்பாஸ் அக்ஷரா – சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பிய ப்ரோமோ!

இதற்கு முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் இவ்வங்கி அதன் அடிப்படை விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்த நிலையில் இது 7.45 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அடிப்படை விகிதங்களில் தற்போதைய நிலையைத் தொடர முடிவு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு SBI வங்கி அதன் அடிப்படை விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி அன்று, அடிப்படை விகிதங்களில் தற்போதைய நிலையைப் பராமரிக்கும் முடிவை RBI அறிவித்தது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.36,448 விற்பனை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதன் அடிப்படையில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் முறையே 4% மற்றும் 3.35% ஆக உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று (டிச.15) முதல் நடைமுறைக்கு வந்துள்ள SBI வங்கியின் அடிப்படை புள்ளிகளை தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் உள்ள நிலையான வைப்புத்தொகைகளின் வட்டியையும் இவ்வங்கி உயர்த்தியுள்ளது. அந்த வகையில் ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு தொகைகளின் (FD) வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!