SBIக்கு அடுத்தடுத்து மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு – EMI எதற்க்கெல்லாம் அதிகரிப்பு?

0
SBIக்கு அடுத்தடுத்து மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு - EMI எதற்க்கெல்லாம் அதிகரிப்பு?
SBIக்கு அடுத்தடுத்து மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு - EMI எதற்க்கெல்லாம் அதிகரிப்பு?
SBIக்கு அடுத்தடுத்து மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு – EMI எதற்க்கெல்லாம் அதிகரிப்பு?

பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு வங்கிகளும் வட்டி உயர்வை அமல்படுத்தி வருகின்றனர். அதனால் தற்போது எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம். அத்துடன் எந்தெந்த கடன்களுக்கு EMI உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போம்.

வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் கொரோனா காலத்தில் பொதுமக்களிடையே நிதி நெருக்கடி நிலை அதிகரித்தது. அதனால் பெரும்பாலானோர் வங்கிகளில் குறைந்த வட்டிகளில் கடன்தொகையை பெற்றனர். அத்துடன் தற்போது நம்மில் பல EMIகளில் பல பொருட்களை வாங்கி உள்ளோம். அத்துடன் ரிசர்வ் வங்கியால் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் முறையில் வட்டி வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அனைத்து வங்கிகளிலும் இம்முறைப்படி வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.

10 வது / 12 வது படித்தவருக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப் 21 இறுதி நாள்..!

மேலும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அத்துடன் இதனை ஏப்ரல் 15ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற மற்ற வங்கிகளில் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவைகளில் 7.25% உள்ளது. இதே போல் பேங்க் ஆப் பரோடாவில் 7.35 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கியில் 7.4 சதவிகிதமும், எம்சிஎல்ஆர் விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இதையடுத்து தற்போது SBI வங்கியில் திருத்தப்பட்ட விகிதத்தை பற்றி பார்ப்போம். இப்போது பாரத ஸ்டேட் வங்கியில் எம்சிஎல்ஆர் ஓராண்டுக்கான 7% என்பது 7.1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றவர்களின் EMI அதிகரிக்கும். இந்த EMI தொகை உயர்வு எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற வங்கிகளை ஒப்பிடும் போது SBI வங்கி குறைவான வட்டி விகிதத்தை கொண்டுள்ளது. இது போன்று மற்ற வங்கி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!