வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!

0
வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!
வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!
வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!

வங்கிகளில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கிகளில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தனிநபர் கடன்:

அன்றாட வாழ்க்கையில் மக்களின் முக்கிய தேவையாக இருப்பது பணம். அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் பணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்தகைய பணம் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் கடன் வாங்க முனைகிறார்கள். சிலர் தங்கள் வாங்கும் பொருட்களை கடனில் வாங்கி மாதந்தோறும் EMI செலுத்தி வருகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப வீட்டு கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என பல விதங்களில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு – RBI அறிவிப்பு!

நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதன் மூலம் எளிதில் தனிநபர் கடன் பெற்றுக்கொள்ளலாம். அரசுக்கு சொந்தமான வங்கிகளில் குறைந்த வட்டி வீதத்தில் தனிநபர் கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தனிநபர் கடனானது குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ரூ 5 லட்சம் ரூபாய்க்கு, 5 வருட கால அவகாசத்தில் பெறப்படும் லோன் தொகையின் வட்டி விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 8.90% விதிக்கப்படுகிறது தவணை தொகை ரூ.10,355 கட்ட வேண்டும். சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வட்டி விகிதம் 8.90% தவணை தொகை ரூ.10,355 ஆகும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 8.70% தவணை தொகை – ரூ.10,307 கட்ட வேண்டும்.யெஸ் பேங்க் வருடத்திற்கு வட்டி விகிதம் 13.99% தவணை தொகை ரூ.11,632, இந்தியன் வங்கி வட்டி விகிதம் 9.05% தவணை தொகை ரூ.10,391 ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? HRA, DA உயர்வு எதிரொலி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 10.00%, தவணை தொகை ரூ.10,624 கட்ட வேண்டும். சவுத் இந்தியன் பேங்க் வட்டி விகிதம் 10.25% – தவணை தொகை ரூ.10,685. எச்டிஎஃப்சி வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 10.50% தவணை தொகை ரூ.10,747 ஆகும். ஐசிஐசிஐ வங்கி வருடத்திற்கு வட்டி விகிதம் 10.50% தவணை தொகை ரூ.10,747. கனரா வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 11.25% – தவணை தொகை ரூ.10,934 என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!