சொந்த வீடு வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகள் வாரி வழங்கும் கடன்கள்!
இந்தியாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக குறைந்த வட்டியில் வீட்டு கடன் அளிக்கிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி வருகின்றனர். வங்கிகளின் வீட்டு கடன் திட்டங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
வீட்டுக் கடன் :
அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருக்கும். அதை நிறைவேற்ற பணம் ஒரு தடையாக அமைகிறது. இந்த நிலையில் சில வங்கிகள் குறைந்த வட்டியில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் அளிக்கிறது. அந்த வகையில் எச்.டி.எப்.சி வங்கி 6.75% வட்டியில் வீட்டு கடன் வழங்குகிறது. தற்போது இந்த வீட்டு கடன் வட்டி பண்டிகை கால சிறப்பு சலுகையாக குறைக்கப்பட்டு 6.70% என்ற சதவீதத்தில் வழங்குகிறது.
திருப்பூரில் நாளை (அக்.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மற்ற வங்கிகளை தொடர்ந்து யெஸ் பேங்க் 6.70 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் பெண்களுக்கு வீட்டு கடன் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும். இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். யெஸ் வங்கியை தொடர்ந்து மஹிந்திரா வங்கியும் பிராசஸிங் கட்டணம் இன்றி வீட்டு கடன் வழங்குகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பொது நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லை!
பேங்க் ஆஃப் பரோடா 6.75 சதவீத வீட்டுக் கடனை வழங்குகிறது. பண்டிகை காலம் என்பதால் பிராசஸிங் கட்டணம் இல்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடனுக்கு 6.60 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 6.7 சதவீத வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது இந்த வட்டி விகிதம் 31 டிசம்பர் 2021 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.