வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க உள்ளோர் கவனத்திற்கு – வட்டி விகித மாற்றங்கள்!

0
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க உள்ளோர் கவனத்திற்கு - வட்டி விகித மாற்றங்கள்!
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க உள்ளோர் கவனத்திற்கு - வட்டி விகித மாற்றங்கள்!
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க உள்ளோர் கவனத்திற்கு – வட்டி விகித மாற்றங்கள்!

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய சலுகையாக குறைந்த அளவு வட்டி கிடைக்கிறது. அந்த வகையில் சேமிப்பு கணக்குகளுக்கு எந்தெந்த வங்கியில் குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

வங்கிகளில் குறைந்தபட்ச வட்டி விகிதம், கணக்கு பாதுகாப்பு, பணம் டெபாசிட் மற்றும் பணம் திரும்ப பெறுதல் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள சம்பளக்கணக்கு என்றும் அழைக்கப்படும் சேமிப்புக் கணக்குகளை வாடிக்கையாளர்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய நன்மைகளில், வட்டி வாய்ப்புகள் சிறந்ததாகும். அதாவது வங்கிகளில் நாம் வைத்திருக்கும் FD கணக்குகளை விட, சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த அளவு வட்டி கிடைக்கிறது.

தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு – விரைவில் அறிவிப்பு!

என்றாலும் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகள் அதிகபட்சமாக 7.25% வரை வட்டி வழங்குகிறது. தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகிறது என விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக ஜூன் 10 முதல் 3% முதல் 6.75% வரை வட்டியை DCB வங்கி வழங்குகிறது. ஜூலை 2 முதல் RBL வங்கி 4.25% முதல் 6.25% வட்டியும், ஜூன் 7முதல் பந்தன் வங்கி 3% முதல் 6%வரை வட்டியும், ஜுன் 4 முதல் இந்துஸ்இந்த் வங்கி 4% முதல் 5.50% வட்டியும், மே 13 முதல் எஸ் வங்கி 4% முதல் 5.25% வட்டியும் வழங்குகிறது. அதே நேரத்தில் சேமிப்பு கணக்குகளுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கும் வட்டியின் அடிப்படையில்,

TN Job “FB  Group” Join Now

மார்ச் 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி – 3% முதல் 3.50% மும், மே 1 முதல் IDBI வங்கி – 3% முதல் 3.40% மும். செப்டம்பர் 28 முதல் கனரா வங்கி – 2.90% முதல் 3.20% மும், மே 26 முதல் பாங்க் ஆப் பரோடா வங்கி – 2.75% முதல் 3.20% மும், நவம்பர் 12 முதல் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி – 3.10% வரையும் வட்டி வழங்குகிறது.

அதிக வட்டி தரும் 5 சிறு நிதிவங்கிகளை பொருத்தளவு,

ஆகஸ்ட் 1 முதல் உட்கார்ஷ் சிறு நிதி வங்கி – 5% முதல் 7.25% மும், மார்ச் 6 முதல் உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி – 4% முதல் 7% மும், மே 17 முதல் AU ஸ்மால் பைனான்ஸ் வங்கி – 3.50% முதல் 7% மும், ஜுன் 1 முதல் எக்விடாஸ் சிறு நிதி வங்கி – 3.50% முதல் 7% மும், மே 6 முதல் ஜனா சிறு நிதி வங்கி – 3% முதல் 6.75% வரையும் வட்டி வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!