சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களில் திடீர் மாற்றம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களில் திடீர் மாற்றம் - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களில் திடீர் மாற்றம் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

பெரும்பாலான இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பாதியை, எதிர்காலத்திற்காக சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்நிலையில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை சவுத் இந்தியன் வங்கி மாற்றியுள்ளது. இந்த வட்டி விகிதம் குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வட்டி விகிதம் திடீர் மாற்றம்:

ஏழை முதல் பணக்காரர்கள் வரை சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நிச்சயம் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளது. தொழிலதிபர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் தங்களுக்கு தெரிந்த சேமிப்பு திட்டங்களில் இணைந்து பயனடைகின்றனர். எந்தவொரு நிதி இலக்கையும் நிறைவேற்ற, நீங்கள் நன்கு திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் அனைத்து விலைகளும் உயர்ந்திருக்கிறது. ஆகவே, வரும் காலத்தில் வரும் விலையேற்றத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

முன் காலத்தில் பலருக்கும் குழந்தைகள் அதிகம். ஆகவே யாராவது ஒருவர் பெற்றோரைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது ஒருவருக்கு ஒரு குழந்தை என்று ஆகிவிட்டது. ஆகவே, வரும் காலத்தில் வேலை பார்ப்பவர்கள் குறைவாகவும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் அதிகமாகவும் இருப்பார்கள். ஆகவே சேமிப்பு மிக முக்கியம். இருப்பினும் நாம் முதலீடு செய்த பணம் எதிர்காலத்தில் அதிக வட்டியோடு நம் கையில் முதிர்வு தொகையாக கிடைத்தால் தான் சந்தோஷம் ஆகும் ஆனால் பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் பெரிதாக வட்டி வழங்குவதில்லை.

SBI வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச எண் அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் தனியார் வங்கியான சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 2.50 சதவீதம் முதல் 4.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். மேலும் சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்பு டெபாசிட்டுக்கு 2.50 சதவீதம் வட்டியும், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 2.75% வட்டியும் வழங்கப்படுகிறது. 5 கோடி ரூபாய்க்கு மேல், 100 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 4.20% வட்டி கிடைக்கும். 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கு 4.50% வட்டி கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!