Post Office ல் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு வட்டி விகித மாற்றம் – மத்திய அரசு உத்தரவு!

0
Post Office ல் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு வட்டி விகித மாற்றம் - மத்திய அரசு உத்தரவு!
Post Office ல் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு வட்டி விகித மாற்றம் - மத்திய அரசு உத்தரவு!
Post Office ல் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு வட்டி விகித மாற்றம் – மத்திய அரசு உத்தரவு!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மத்திய அரசு:

சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். மேலும் போஸ்ட் ஆஃபிஸில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்,PPF திட்டம்,மாத வருமானத் திட்டம்,தேசிய சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போஸ்ட் ஆபீஸ் களிலும் பேங்கை போலவே சேமிப்பு திட்டத்தை தொடங்களாம்.மேலும் இந்த கணக்கை தனி நபராகவோ,அல்லது கூட்டாகவோ தொடங்கலாம்.

Reliance Jio, Airtel, Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

இத்தகைய சேமிப்பு திட்டங்களில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களும் உள்ளன. இதன் மூலம் பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் எளிதில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் வட்டி விகிதங்கள் அமைந்துள்ளன. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த விஷயம் 2022-23 நிதியாண்டிற்கான வட்டியில் மாற்றம் ஏற்படுமா என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிறு சேமிப்பு திட்டத்தில் உள்ள வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது உள்ள வட்டி விகிதமே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தபால் அலுவலக சேமிப்பு கணக்கிற்கு ஆண்டுக்கு 4% வரை வட்டி என்றும் கணக்கை தொடங்குவதற்கான குறைந்தபட்ச தொகை 500 என்றும் மாதத்தின் 10 ஆம் தேதிக்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 5 ஆண்டு அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு கணக்கு (RD) கிற்கு வருடத்திற்கு 5.8% வட்டியும் மாதத்திற்கு குறைந்தது 100 டெபாசிட்டுகள் இங்கு பெறலாம் என்றும் அதிகபட்ச வரம்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது. போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்டிற்கு குறிப்பிட்ட தக்க வகையில் 1 ஆண்டு,2 ஆண்டு,3 ஆண்டு கால வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் ஒவ்வொன்றும் 5.5% எனவும், 5 ஆண்டு கால வைப்புத் தொகையின் விகிதம் 6.7% எனவும் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டதின் (SCSS) கீழ் ஆண்டுக்கு 7.4% சம்பாதிக்கலாம், மாதாந்திர திட்டத்தின் மூலம் 6.6% அதிகபட்ச முதலீடு வரம்பு ஒற்றை கணக்கில் ரூ.4.5% மற்றும் கூட்டு கணக்கில் ரூ.9 லட்சம் வரை வட்டி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!