ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்பொழுது பிறப்பு சான்றிதழ் முதல் துவங்கி, ஆதார், பான் அட்டைகள், வங்கி சேவைகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பம் செய்வது பற்றிய முழு விவரம் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் விண்ணப்பம்:

மத்திய மற்றும் மாநில அரசின் பல வகையான சேவைகளை நாம் ஆன்லைன் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் படி நாம் வீடுகளில் இருந்த படியே திருமண சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்யவும், அதன் இ-ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். அந்த வரிசையில் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பம் செய்வது குறித்த சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி பயனர்கள் கலப்பு திருமண சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

BSNL, Jio Fiber & Airtel Extreme இன்டர்நெட் சேவை திட்டங்கள் – முழு விவரம்!

இவ்வகை ஆவணங்கள் அரசு உதவித்தொகை பெறுவதற்கும், அரசு நலத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கும், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை பணியில் சேர்வதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதில் முதலாவதாக மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் புகைப்படம், விண்ணப்பம் செய்பவரின் ஆதார் அட்டை, குடிமக்கள் கணக்கு எண், இருவரது சாதி சான்றிதழ் மற்றும் திருமண பதிவு சான்றிதழ் அவசியமாகும். விண்ணப்பம் செய்வதற்கு முதலில்,

 • https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குள் செல்லவும்.
 • அதில் Sign in Option கேட்கப்பட்டிருக்கும்.
 • அங்கு Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 • அவற்றில் Citizen Login என்பதை தேர்வு செய்யவும்.
 • பிறகு New User Option என்பதை கிளிக் செய்யவும்.
 • அதில் சில முக்கியமான தகவல்கள் கேட்கப்படும். அவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.
 • பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
  அதை உள்ளிடவும்.

TN Job “FB  Group” Join Now

 • பின்னர் நீங்கள் பதிவு செய்த Login மற்றும் Password ஐ கொடுக்கவும்.
 • அங்கு Department Wise என்ற ஆப்ஷனில் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.
 • அதில் Inter-caste Marriage Certificate ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
 • கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்தவுடன் Proceed கொடுக்கவும்.
 • தொடர்ந்து Register CAN என்ற பட்டனை கிளிக் செய்து கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பவும்.
 • இப்போது CAN Registration Number உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
 • அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed கொடுக்கவும்.
 • பின்னர் OTP அனுப்பப்படும். அதை கொடுத்து Proceed செய்யவும்.
 • அடுத்து CAN Register செய்த போது கொடுத்த தகவல்கள் தோன்றும்.
 • அதில் Form Details ல் விவரங்களை நிரப்பியவுடன், சரிபார்த்து Submit கொடுக்கவும்.
 • பின்னர் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Search செய்து, CAN Register தகவல்களை சரி பார்க்கவும்.
 • இப்போது தான் Inter-caste Marriage Certificate பக்கம் திறக்கும்.
 • அதில் மணமகன் மற்றும் மணமகள் பெயர், சாதி சான்றிதழ் போன்றவற்றை பதிவு செய்யவும்.
 • பிறகு திருமண தகவல்களை கொடுத்து Declaration ஆப்ஷனை கொடுத்து Submit செய்யவும்.
 • தொடர்ந்து List of Documents பகுதியில் புகைப்படம், முகவரி, சாதி சான்றிதழ், சுய அறிவிப்பு, திருமண சான்றிதழ் போன்றவற்றை 50 KB அல்லது PDF 200 KB அளவில் பதிவேற்றம் செய்யவும்.
 • பின்னர் Self Declaration படிவத்தை பதிவிறக்கம் செய்து, கையொப்பம் இட்டு, Scan செய்து Upload செய்ய வேண்டும்.
 • அடுத்து Make Payment என்ற ஆப்ஷனில் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • இந்த விண்ணப்பத்தை அரசு அலுவலகங்கள் சரி பார்த்தவுடன், மொபைல் வழியாக தகவல்கள் அனுப்பப்படும்.
 • இறுதியாக TNeGA போர்டலை லாகின் செய்து கலப்பு திருமண சான்றிதழை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!